உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேசிய விளையாட்டு போட்டி பள்ளி மாணவர் அபார சாதனை

தேசிய விளையாட்டு போட்டி பள்ளி மாணவர் அபார சாதனை

திருப்பூர்: சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவரை, அமைச்சர் பாராட்டினார்.காங்கயம், வரதப்பம்பாளையத்தில் உள்ள எஸ்.வி.என்.எம்., மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 1 படிப்பவர் கவின் கருப்பசாமி. இவர் தேசிய மற்றும் சமீபத்தில் நேபாள நாட்டில் நடந்த கபடி மற்றும் தடகள போட்டியில் பல வெற்றிகளை பெற்றார். ஜம்மு காஷ்மீரில் நடந்த தடகள போட்டியில் பங்கேற்று, தமிழகத்துக்காக, 3,000 மீட்டரில் தங்கமும், 800 மீட்டரில் வெள்ளி பதக்கமும் வென்று சர்வதேச போட்டிக்கு தேர்ச்சி பெற்றார். இம்மாதம், நேபாளம் போக்கராவில் நடந்த சர்வதேச அளவிலான போட்டியில், இந்தியா, நேபாளம், இலங்கை, பூடான் ஆகிய நாடுகள் பங்கேற்ற போட்டியில் பங்கேற்று, 3,000, 800 மற்றும் 200 மீட்டர் ஆகிய போட்டிகளில் முதலிடம் பெற்று தங்கம் வென்றார்.நேற்று இ.பி.இ.டி., கல்லுாரியில் முதல்வர் கோப்பைக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இதில், பங்கேற்ற அமைச்சர் சாமிநாதன், மாணவர் கவின் கருப்பசாமிக்கு பதக்கம் வழங்கி பாராட்டினார். ---சர்வதேச மற்றும் தேசிய கபடி மற்றும் தடகள போட்டிகளில் வெற்றி மாணவர் கவின் கருப்பசாமியை, அமைச்சர் சாமிநாதன் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை