உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவிலில் நவ சண்டி மஹா யாகம்

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவிலில் நவ சண்டி மஹா யாகம்

அவிநாசி; ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் மற்றும் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு நவசண்டி மஹா யாகம் நடைபெற்றது. அவிநாசி அருகே ராக்கியாபாளையம் - ஐஸ்வர்யா கார்டனில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபுரம் ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் மற்றும் ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் கோவிலில் ஸ்ரீ சாரதா நவராத்திரி விழாவை முன்னிட்டு நவ சண்டி மஹா யாகம்,வரும் அக், 1ம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து ஹோமம், விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பிரவேசம் ஆகியவற்றுடன் நவசண்டி யாகம் துவங்கியது. வரும் 1ம் தேதி வரை நவ சண்டி மஹா யாக பாராயணம் தொடர்ச்சி மற்றும் சண்டி ஹோமம், ஷோடாச உபசார மஹா தீபாராதனை, மங்கல இசை, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ