உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நவராத்திரி விழா துவக்கம் : கோவில்களில் சிறப்பு பூஜை

நவராத்திரி விழா துவக்கம் : கோவில்களில் சிறப்பு பூஜை

உடுமலை: உடுமலை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் நவராத்திரி விழா நேற்று துவங்கியது. அம்மனுக்கு பல்வேறு திரவியங்களில் மகா அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, லலிதா சகஸ்ரநாமம், தீபாராதனை நடந்தது. மாலை, 6:15 மணிக்கு, அம்மன் ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சி நடந்தது. வரும், 2ம் தேதி வரை, நவராத்திரி விழாவில், தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், சிறப்பு அலங்காரம் நடக்கிறது. * வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி, நேற்று கொலு வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், காலை, மாலை நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பக்தி பாடல்கள் பாடி அம்மனை வழிபட்டனர். இதே போல், வால்பாறை அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவில், வாழைத்தோட்டம் மாரியம்மன்கோவில், சிறுவர்பூங்கா ஆதிபராசக்தி கோவில், முடீஸ் சுப்ரமணிய சுவாமி கோவில்களில் நேற்று கொலு வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை