நவராத்திரி திருவிழா நிறைவு: கோவில் ஊழியர்கள் கவுரவிப்பு
திருப்பூர்: திருப்பூர் வடக்கு ரோட்டரி நவராத்திரிக் குழு, ஆதீஸ்வர் டிரஸ்ட், பிரேமா கல்வி நிறுவனங்கள், திருப்பூர் தமிழ்ச் சங்கம் ஆகியன இணைந்து திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் 9 நாட்கள் 33ம் ஆண்டு நவராத்திரி திருவிழாவை நடத்தின. இதை தொடர்ந்து கோவில் பணியாளர்களுக்கு நன்றி பாராட்டும் விழா நடந்தது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். திருப்பூர் வடக்கு ரோட்டரி தலைவர் குணசேகரன் வரவேற்றார். நவராத்திரிக் குழு செயலாளர் பாலசுப்பிரமணியன் அறிக்கை சமர்ப்பித்தார். அறங்காவலர் குழுத் தலைவர் சங்கு சுப்பிரமணியன், உறுப்பினர்கள் பிருந்தா, அர்த்தநாரீஸ்வரன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். திருப்பூர் வடக்கு ரோட்டரி செயலாளர் அம்பிரத்னம் நன்றி கூறினார். நவராத்திரிக் குழு பொருளாளர் சிவக்குமார், ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திகேயன், நாகேந்திரபிரசாத் முதலியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். கோவில் பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.