மேலும் செய்திகள்
நவராத்திரி கொண்டாட்டம் விழா ஏற்பாடுகள் தீவிரம்
14-Sep-2025
திருப்பூர்; திருப்பூர் கோவில்கள், வீடுகளில் கொண்டாடப்பட்டு வந்த நவராத்திரி பண்டிகை இன்று விஜயதசமியுடன் நிறைவு பெறுகிறது. நம்முள் இருக்கும் நல்ல எண்ணங்கள், திறமைகளை ஒன்றிணைத்து, நம் கெட்ட எண்ணங்களை அழிப்பது தான் நவராத்திரியின் முக்கியத்துவமாக பார்க்கப்படுகின்றது. விழாவின் முக்கிய அங்க மாக கொலு வைப்பது வழக்கம். இவ்விழாவையொட்டி கடந்த, ஒன்பது நாட்களாக கொலு வைக்கும் நிகழ்ச்சி வீடுகளிலும், கோவில்களிலும், தனியார் அமைப்புகள் சார்பிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு நாட்களும் வித விதமாக பிரசாதங்களை படையலிட்டு, பாடல்கள் பாடி, அம்மனை வழிபட்டு மகிழ்ந்து வந்தனர். நவராத்திரியின், ஒன்பது நாள் இரவுகளின் திருவிழா இந்தியாவின் மிகப் பெரிய பாரம்பரிய பண்டிகையாக மக்கள் தேசம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். முதல், மூன்று நாட்கள் துர்க்கையையும், அடுத்த, மூன்று நாட்கள் லட்சுமி தேவியை, அடுத்து, சரஸ்வதி தேவியை போற்றி வழிபாடு செய்தனர். ஒன்பது நாட்களும் தேவியை வழிபட்ட பின், பத்தாவது நாள் வடமாநிலத்தில் தசராவாகவும், தமிழகத்தில் விஜயதசமியாகவும் கொண்டாடுகிறோம். திருப்பூரில் கொண்டாட்டம் நவராத்திரி விழா திருப்பூர் மற்றும் நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவில் என, பல கோவில்களில், ஹிந்து அமைப்பு உட்பட பல்வேறு அமைப்பு, பொதுமக்கள் சார்பில் தங்களது வீடுகளில் கொலு வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர். கோவில்களில் ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் ஆன்மிக கருத்தரங்கம், கலை நிகழ்ச்சி, திருவிளக்கு வழிபாடு, என, சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. நவராத்திரி விழா, இன்று விஜயதசமியுடன் நிறைவு பெறுகிறது.
14-Sep-2025