வேகத்தடை வேண்டும்
மா.கம்யூ., தாலுகா குழு உறுப்பினர் பிரகாஷ், கலெக்டருக்கு அனுப்பிய மனு: ஊத்துக்குளி தாலுகா, விஜயமங்கலம் ரோடு, புலவர்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே, பொறியியல் கல்லுாரி, ஸ்பின்னிங் மில்கள், பெட்ரோல் பங்க், 'சிப்காட்' செல்லும் ரோடு உள்ளது. தினமும், ஏராளமான கனரக வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. 'சிப்காட்' பிரிவு செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. உயிர் சேதம் மற்றும் விபத்துகளை தடுக்க புலவர்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே, வேகத்தடை அமைக்க வேண்டும்.