மாநகராட்சிக்கு புதிய கமிஷனர்
திருப்பூர்; கடந்த ஆண்டு ராமமூர்த்தி, திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார். கடந்த மாதம் அவர் ஓய்வு பெற்றதால், துணை கமிஷனர் மகேஸ்வரி கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக, அமித் நியமிக்கப்பட்டுள்ளார். 2019ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், சென்னை மாநகராட்சியின் மண்டல துணை கமிஷனர் (தெற்கு) ஆக பணியாற்றி வரும் நிலையில், திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.