கே.ஜி.புதுார் பகுதியில் புதிய மின் இணைப்பு எண்
திருப்பூர்: கே.ஜி., புதுார் மின்பகிர்மானத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு புதிய மின் இணைப்பு எண் வழங்கப்பட்டு, மின் கணக்கீடு செய்யப்படுகிறது.இதுகுறித்து திருப்பூர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை:திருப்பூர் கோட்டம், வடக்கு உப கோட்டம், கே.ஜி., புதுார் மின்பகிர்மானத்துக்கு உட்பட்ட மின் இணைப்புகளை பிரித்து, கதிர்நகர் என்கிற புதிய பகிர்மானம் உருவாக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளுக்கு புதிய மின் இணைப்பு எண் வழங்கி, மின் கட்டண கணக்கீடு செய்வதற்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கே.ஜி., புதுார் மின்பகிர்மானத்துக்கு உட்பட்ட கான்வென்ட் கார்டன் 1 முதல் மூன்றாவது வீதி வரை, சத்திய மூர்த்தி நகர், கதிர் லே-அவுட், காங்கயம் ரோடு டி.எஸ்.கே., மருத்துவமனை முதல் செயின்ட் ஜோசப் கல்லுாரி வரையிலான பகுதிகளுக்கு புதிய மின் இணைப்பு எண் வழங்கப்பட்டு வருகிறது. புதிய மின் இணைப்பு எண் வாயிலாக, வரும் நாட்களில் மின் கணக்கீடு செய்யப்படும். கணக்கீடு செய்யப்பட்ட நாளிலிருந்து, 20 நாட்களுக்குள் மின்கட்டணத்தை செலுத்தவேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.