அவிநாசி நிலையத்துக்கு புதிய தீயணைப்பு வாகனம்
அவிநாசி: அவிநாசி தீயணைப்பு மற்றும் பேரிடர் கால மீட்பு பணி நிலையத்துக்கு, 2.50 கோடி ரூபாய் மதிப்பில், புதிய அதிநவீன தீத்தடுப்பு மற்றும் பேரிடர் கால மீட்பு வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிநவீன தீத்தடுப்பு வாகனம், 12 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்டது. தீயணைப்புத் துறையில் தீ விபத்து காலங்களில் நீண்ட நேரம் சேவை புரியும் வகையில் புதிய வாகனம் வடிவமைக்கப்பட்டுள் ளதாக, அவிநாசி தீயணைப்பு நிலைய இன்ஸ்பெக்டர் நவீந்திரன் தெரிவித்தார். முன்னதாக, புதிய வாகனம், ரத வீதிகளில் வலம் வந்து, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தி, இயக்கம் துவக்கப்பட்டது.