புதிய ரேஷன் கடை திறப்பு
அவிநாசி பேரூராட்சி, 2வது வார்டு, மடத்துப்பாளையம் பிள்ளையார் கோவில் வீதியில், சிதிலமடைந்து கிடந்த ரேடியோ ரூம் சீரமைக்கப்பட்டு பகுதி நேர ரேஷன் கடை அமைக்கப்பட்டது. பேரூராட்சி தலைவர் தனலட்சுமி திறந்துவைத்தார். நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ரகுநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், தாசில்தார் சந்திரசேகர், பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம், வட்ட வழங்கல் அலுவலர் சித்தையன், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன்நம்பி, நகர செயலாளர் வசந்த்குமார், 2வது வார்டு கவுன்சிலர் கவிதா, கொங்கு அறக்கட்டளை தலைவர் பொன்னுக்குட்டி, முத்து அவிநாசியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர். புதிய கடையால் மடத்துப்பாளையம் மற்றும் சூளை பகுதியில் வசிப்பவர்கள் பயன்பெறுவர்.