உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நிப்ட்- டீயில் கதர் கண்காட்சி

நிப்ட்- டீயில் கதர் கண்காட்சி

மத்திய அரசின் கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணையம், 'நிப்ட்-டீ அடல் இன்குபேசன்' மையம், 'நிப்ட்-டீ' கல்லுாரி சார்பில், கதர் மற்றும் கைத்தொழில் பொருட்கள் விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டது. 'நிப்ட்-டீ' கல்லுாரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கதர் கிராம தொழில்கள் ஆணைய துணை இயக்குனர் சித்தார்த்தன் பங்கேற்று, கதர் கிராம தொழில்களின் முக்கியத்துவம் குறித்து பேசினார். 'அடல் இன்குபேசன்' மைய தலைமை நிர்வாக அலுவலர் செந்தில்குமார், தலைமை செயல்பாட்டு அலுவலர் அருள்செல்வன், ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி, கல்லுாரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு சர்வோதய சங்கங்கள், காதி துணி, கதர் ஆடை மற்றும் மட்பாண்ட தயாரிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தன. 'இந்தியாவுக்கான காதி' என்ற பெயரில் நடந்த வரைவு போட்டியில், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ