மேலும் செய்திகள்
கண் பரிசோதனை முகாம்
08-Sep-2025
திருப்பூர், : திருப்பூர், முதலிபாளையம் 'நிப்ட்-டீ' கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம், வாசன் ஐ கேர் மருத்துவமனை சார்பில், கண்பரிசோதனை முகாம் நடந்தது. 'நிப்ட்-டீ' கல்லுாரியில் நடந்த முகாமில், 'டீன்' சம்பத் முன்னிலை வகித்தார். சுந்தரபாண்டியன் தலைமையிலான, வாசன் ஐ கேர் மருத்துவமனை குழுவினர், மாணவ, மாணவியருக்கு கண் பரிசோதனை செய்தனர். மொத்தம்; 743 மாணவ, மாணவியர் கண் பரிசோதனை செய்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை, என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் ராஜசேகரன், முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.
08-Sep-2025