உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மது அருந்தியிருந்தால் அனுமதியில்லை! இனி, மருத்துவமனையில் சோதனை

மது அருந்தியிருந்தால் அனுமதியில்லை! இனி, மருத்துவமனையில் சோதனை

திருப்பூர்: 'மது அருந்திவிட்டு மருத்துவமனைக்குள் வருவோர் குறித்து கண்காணிக்கப்படும். மது அருந்திய நபர்கள் மருத்துவ மனைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்,' என, அரசு மருத்துவக் கல்லுாரி டீன் முருகேசன் தெரிவித்துள்ளார்.சென்னையில் அரசு டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை அடுத்து, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, பொது வார்டுக்கு வந்து செல்வோர், குறிப்பாக உள்நோயாளிகளை பார்க்க, டாக்டரை சந்திக்க வரும் நபர்கள் எவ்வளவு நேரம் வளாகத்துக்குள் இருக்கின்றனர் என்பதை கண்காணித்து வருகின்றனர்.இந்நிலையில், மருத்துவமனைக்கு நுழைவோருக்கு மூன்று நிறங்களில் பாஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில், மது அருந்தி விட்டு, சிலர் மருத்துவமனை வளாகத்துக்குள் வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.இது குறித்து தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்துள்ள மருத்துவக் கல்லுாரி நிர்வாகம், மது அருந்தி விட்டு உள்ளே நுழைவோரை கண்காணித்து, வாயிலிலேயே தடுத்து நிறுத்தி திருப்ப அனுப்ப முடிவு செய்துள்ளது.இவர்களால், அதிக சுகாதாரக்கேடு சுற்படுவதுடன், சக நோயாளி உடன் இருப்பவர்களுடன் சண்டை, வாக்குவாதம், பிரச்னை ஏற்படுவதால், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி 'டீன்' முருகேசன் கூறுகையில், ''மருத்துவமனையில் பாதுகாவலர்களாக உள்ள சிலரை தேர்வு செய்து அவர்களுக்கு 'ப்ரீத் அனலைசர்' கருவி வழங்கப்படும். அவர்கள் மகப்பேறு, குழந்தைகள் வார்டு, பொது வார்டு பகுதி நுழைவு வாயிலில் பணியில் ஈடுபடும்போது, வார்டுக்குள் நுழையும் நபர்கள் மீது சந்தேகம் எழுந்தால், 'ப்ரீத் அனலைசர்' கருவியால் மது அருந்தியுள்ளனரா என்பது குறித்து பரிசோதித்த பின், அனுமதிக்கப்படுவர். வார்டில் சந்தேகிக்கும் நபர்கள் சுற்றித்திரிந்தால், வெளியேற்ற பாதுகாவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ராஜவேல்,வத்தலக்குண்டு
நவ 30, 2024 11:54

அப்படின்னா இனிமேல் அந்த ஆஸ்பத்திரி ஆளே வராம வெறிச்சோடிப் போய் கிடக்க வேண்டியதுதான்! குடிச்சிட்டு வண்டி ஓட்டக் கூடாது, ஆஸ்பத்திரிக்கு வரக்கூடாது, சலம்பல் பண்ணி டான்ஸ் ஆடக் கூடாது, போலீஸை தாக்கக் கூடாதுன்னு இப்படி புதுசு புதுசா திடீர் திடீர்னு சட்டம் போட்டா குடிமகன்கள் என்னதான் செய்ய முடியும்? அவனுக்கு நடக்கும் இந்த கொடுமையை யாரும் தட்டிக் கேட்க வர மாட்டாங்கன்ற தைரியத்துலதான இப்படி எல்லாம் பண்றீங்க? வயிறு எரிஞ்சு சொல்றேன் இந்த கொடுமையை எல்லாம் மேல இருக்க அந்த ஆண்டவன் பாத்துகிட்டுதான் இருக்கான் ஒருநாள் இதுக்கான கூலியை உங்களுக்கு அவன் நிச்சயம் கொடுப்பான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை