உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பஸ் வசதி இல்லை; மாணவர் தவிப்பு

பஸ் வசதி இல்லை; மாணவர் தவிப்பு

அனுப்பர்பாளையம் : தமிழ்நாடு மக்கள் மறுமலர்ச்சி கழக தலைவர் நாகராஜ், மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி உள்ள மனு:திருப்பூர் ஒன்றியம், பொங்குபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பொங்கு பாளையம், கிருஷ்ணா நகர், அய்யம்பாளையம், அம்மன் நகர், சக்தி கார்டன் ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் அய்யம்பாளையம் நடுநிலைப் பள்ளியிலும், பெருமாநல்லுார் மேல்நிலைப் பள்ளியிலும் படித்து வருகின்றனர்.மாணவர்கள் பள்ளி செல்லவும், மாலை வீடு திரும்பவும் பஸ் வசதி இல்லை. பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். சில மாணவர்கள் ஆட்டோவில் சென்று வருகின்றனர். இதற்காக அதிக செலவிடுகின்றனர். மாணவர்களின் சிரமத்தை போக்க பஸ் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ