உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நுால் விலையில் மாற்றமில்லை! ஆங்கில புத்தாண்டில் மகிழ்ச்சி

நுால் விலையில் மாற்றமில்லை! ஆங்கில புத்தாண்டில் மகிழ்ச்சி

திருப்பூர்; நுால்விலையில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பு, ஆங்கில புத்தாண்டான நேற்று வெளியானது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஓராண்டுக்கு மேலாக, பஞ்சு - நுால்விலையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. பஞ்சு விலை, சிறிய ஏற்றத்தாழ்வுடன் நிலையாக இருக்கிறது. பருத்தி சீசன் துவங்கியுள்ள நிலையில், புதிய பஞ்சு வரத்து துவங்கியுள்ளது. இந்நிலையில், நுால்விலையில் மாற்றமில்லை என, நுாற்பாலைகள் அறிவித்துள்ளன.ஆங்கில புத்தாண்டு நாளில், நுால் விலை குறையுமா என, தொழில்துறையினர் காத்திருந்தனர். நேற்று, நுால் விலையில் மாற்றமில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் மாதங்களில், நுால்விலை மேலும் குறையுமா என்றும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !