உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நிற்காத டவுன் பஸ்கள் பயணிகள் தவிப்பு

நிற்காத டவுன் பஸ்கள் பயணிகள் தவிப்பு

திருப்பூர்; திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 20 கி.மீ., சுற்றியுள்ள கிராமங்களுக்கு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. திருப்பூர் வரும் மக்கள், தாடிக்கார முக்கு, டவுன்ஹால், வளர்மதி பாலம், கருவம்பாளையம் பகுதிகளில் நின்று, பஸ் ஸ்டாண்டுக்கு ஏறிச்செல்வது வழக்கம்.அரசு டவுன் பஸ்களில், பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இலவசம் என்றாலும், கணக்கிடுவதற்காக பயணச்சீட்டு கட்டாயம் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில், டவுன்ஹால், ரயில்வே ஸ்டேஷன் பகுதிகளில், டவுன் பஸ்கள் சில நேரம் நிற்காமல் சென்றுவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.நிழற்குடை அருகே பஸ்கள் நின்று செல்ல தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர். இருப்பினும், தொலைவில் உள்ள ஊர்களுக்கு செல்லும் டவுன் பஸ்கள், பஸ் ஸ்டாப்புக்கு முன்பாகவே நிறுத்தி, பயணிகளை இறக்கிவிட்டு, வேகமாக சென்றுவிடுகின்றன. இதனால், நீண்ட நேரம் பஸ்சுக்கு காத்திருக்கும் பெண்கள், ஓடிப்பிடிக்க முடியாமல் ஏமாற்றமடைகின்றனர்.பெண்கள் கூறுகையில், 'அடுத்தடுத்து டவுன் பஸ்கள் நிற்கும் நேரத்தில், சில ஊர்களில் இருந்து வரும் டவுன் பஸ்கள், அந்த பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் சென்றுவிடுகின்றன. குறிப்பிட்ட ஊருக்கு செல்ல வேறு பஸ் இல்லாதசூழலில் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.நகரப்பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப்களில், அனைத்து டவுன் பஸ்களும், நிழற்குடை அருகே நின்றுசெல்ல போக்குவரத்துக்கழக அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை