மேலும் செய்திகள்
நாளைய மின் தடை
06-Nov-2024
உடுமலை; மின் வாரியம், உடுமலை நகர் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட, சங்கர் நகர், பஜார் பகிர்மான மின் நுகர்வோர் கடந்த மாத, மின் கட்டண தொகையை செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.மின் வாரியம், உடுமலை கோட்ட செயற்பொறியாளர் மூர்த்தி கூறியிருப்பதாவது:மின் வாரியம், உடுமலை கோட்டம், நகர் பிரிவு உதவி பொறியாளர் அலுவலக்திற்குட்பட்ட, சங்கர் நகர் பகிர்மானம், பஜார் பகிர்மானத்திற்குட்பட்ட, யு.கே.சி., நகர், பொள்ளாச்சி ரோடு, பெட்ரோல் பங்க் வரையிலான பகுதிகளிலுள்ள மின் இணைப்புகளுக்கு நிர்வாக காரணங்களினால், நவ., மாத மின் கணக்கீடு மேற்கொள்ள இயலவில்லை.ஆகவே, மேற்படி பகிர்மான மின் நுகர்வோர், செப்., மாதம் செலுத்திய மின் கட்டண தொகையையே, நடப்பு நவ., மாதத்திற்கு செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு, தெரிவித்துள்ளார்.
06-Nov-2024