உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நொய்யல் மீட்டெடுப்பு; விவசாயிகள் முனைப்பு

நொய்யல் மீட்டெடுப்பு; விவசாயிகள் முனைப்பு

பல்லடம்; நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்தம் கூறியதாவது: தொழில் நிறுவனங்கள் நினைத்தால், நொய்யல் ஆற்றை பசுஞ்சோலையாக மாற்ற முடியும். உள்ளாட்சி அமைப்புகள், குப்பைகள் கழிவுகளை கொட்டி, நொய்யல் நதிக்கு எதிரியாக மாறிவிட்டன. நொய்யலை மீட்டுத் தருமாறு, அனைத்து துறை அதிகாரிகள் மட்டுமின்றி, முதல்வர் வரை கோரிக்கை விடுத்தாகிவிட்டது. இனி, யாரையும் நம்பி பயனில்லை. விரைவில், நொய்யல் மீட்பு குழு மற்றும் நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் இணைந்து, தன்னார்வலர்கள், விவசாயிகளை ஒருங்கிணைத்து, நொய்யலை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளோம். விரைவில், இது குறித்து அறிவிப்போம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி