உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து

கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து

தெக்கலுார் ரோட்டரி சங்கம் சார்பில், கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் விழா நடந்தது. தெக்கலுரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நடந்த விழாவுக்கு, ரோட்டரி தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். திட்ட சேர்மன் முன்னாள் தலைவர் ஆறுமுகம் பங்கேற்று கர்ப்பிணிகளுக்கு ஏழு வகை சத்தான உலர் பழங்கள் வழங்கினார். ''தனியார் பங்களிப்புடன் ஒவ்வொரு மாதமும் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்படும்'' என ரோட்டரி நிர்வாகிகள் தெரிவித்தனர். பட்டய தலைவர் வாசுதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரோட்டரி செயலாளர் அருள்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை