உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ஊட்டச்சத்து வழங்கல்

 ஊட்டச்சத்து வழங்கல்

அவிநாசி: தெக்கலுார், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் விழா நடந்தது. தெக்கலுார் ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த விழாவுக்கு ரோட்டரி சங்க தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் ஆறுமுகம் பேசினார். திட்ட ஸ்பான்சராக சங்கர் வெங்கடாசலம் கலந்துகொண்டு கர்ப்பிணிகளுக்கு ஏழு வகை சத்தான உலர் பழங்கள் மற்றும் ஊட்டச்சத்து பை வழங்கினார். ரோட்டரி பட்டய தலைவர் நடராஜன், துணைத் தலைவர் சண்முகம், பொருளாளர் பாரதி, நடராஜன், ராமகிருஷ்ணன் மற்றும் பலர் பங்கேற்றனர். செயலாளர் அருள்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை