உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தமிழக கால்பந்து அணிக்கு என்.வி., பள்ளி மாணவி தேர்வு

தமிழக கால்பந்து அணிக்கு என்.வி., பள்ளி மாணவி தேர்வு

உடுமலை: உடுமலை பெதப்பம்பட்டி என்.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி மிருதுளா, தமிழக கால்பந்து அணியில் விளையாட தேர்வு பெற்றுள்ளார். தஞ்சாவூரில், இந்திய பள்ளிகளின் விளையாட்டு கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து தேர்வு போட்டியில் கலந்து கொண்டு, மாணவி மிருதுளா தமிழ்நாடு அணியில் விளையாட மூன்றா-வது முறையாக இடம் பிடித்தார். ஜார்க்கண்ட்டில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிக்கும் அவர் தேர்வாகி உள்ளார். பள்ளி மாணவி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் கணேசன் ஆகியோருக்கு பள்ளி நிர்வாகம் மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர். என்.வி., மெட்ரிக் பள்ளி கால்பந்து அணி, தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற, முதலமைச்சர் கோப்பை உட்பட அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை