உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / செக்போஸ்ட் மின் இணைப்பு துண்டித்த அதிகாரிகள்

செக்போஸ்ட் மின் இணைப்பு துண்டித்த அதிகாரிகள்

அனுப்பர்பாளையம்; போயம்பாளையம், புறக்காவல் நிலையத்துக்கு முறைகேடாக மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வந்ததையடுத்து, மின் இணைப்பை, மின் வாரிய அதிகாரிகள் துண்டித்தனர்.திருப்பூர், பி.என்., ரோடு, போயம்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குற்றங்களை தடுக்கும் வகையில், அனுப்பர்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் சார்பில், போயம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. புறக்காவல் நிலையத்துக்கு தேவையான மின்சாரத்தை மின்வாரியம் அனுமதியின்றி, சட்டத்துக்கு புறம்பாக அருகில் உள்ள மின்கம்பத்தில் இருந்து முறைகேடாக மின்சாரம் எடுத்து போலீசார் பயன்படுத்தி வந்தனர்.தகவல் அறிந்த மின்வாரிய அதிகாரிகள் நேற்று முன்தினம், 'செக்போஸ்ட்'க்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்தனர். இதனால், மின்சாரமின்றி 'செக்போஸ்ட்' இருட்டாக உள்ளது.இதனால், பூட்டப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ