உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விவசாய விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய்: எம்.எல்.ஏ., எதிர்ப்பு

விவசாய விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய்: எம்.எல்.ஏ., எதிர்ப்பு

திருப்பூர் : திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜிடம், பல்லடம் எம்.எல்.ஏ., ஆனந்தன் (அ.தி.மு.க.,), நேற்று அளித்த மனு: மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன், பாரத் பெட்ரோலியம் நிறுவனம், கோவை மாவட்டம் இருகூர் முதல் கர்நாடக மாநிலம் தேவனஹந்தி வரை எண்ணெய் குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொண்டுவருகிறது. இருகூரிலிருந்து, திருப்பூர் மாவட்டம் முத்துார் வரை, விளைநிலங்கள் வழியாக குழாய் பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.கடந்த 2013ல், அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், கொச்சி - பெங்களூரு இடையே கெயில் காஸ் குழாய் அமைக்கும் பணி நடைபெற்றபோது, விளைநிலங்கள் வழியாக குழாய் அமைக்க அப்போதைய முதல்வர் பழனிசாமி தடைவிதித்தார்.தற்போது திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், பல்லடம் சட்டசபை தொகுதியில் பல ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். நெடுஞ்சாலை வழியாகவே எண்ணெய் குழாய் கொண்டுசெல்ல வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை