முதியவர் பலி
அவிநாசி : அன்னுார், சொக்கம்பாளையம் பகுதி காக்காபாளையத்தில் வசித்து வந்தவர், கட்டட மேஸ்திரி ஈஸ்வரன், 64. அவிநாசி, சேவூர் அருகே தண்ணீர்பந்தல் பகுதியில் புதிய வீடு கட்டும் பணியில், பணியாற்றி வந்தார்.நேற்று காலை சேவூரில் இருந்து மொபட்டில் தண்ணீர்பந்தல் வந்த ஈஸ்வரன் ரோட்டை கடக்க முயன்றபோது தனியார் பஸ் மோதி பலியானார்.