மேலும் செய்திகள்
ஊர் மலைப்பகுதியில் மதுக்கடை வைக்க எதிர்ப்பு
26-May-2025
திருப்பூர் : சின்னாண்டிபாளையம் பகுதி, கிராமப்புற சூழலில் அமைந்துள்ளது. ஆண்டிபாளையம் குளத்தில், படகுக் குழாம் அமைந்த பின், சுற்றுலாத்தலமாக மாறியுள்ளது. அப்பகுதியில் இரண்டு வகைமதுக்கடைகள் அமைக்கும் பணி நடந்து வருவதால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.முன்னாள் கவுன்சிலர் வசந்தாமணி தலைமையில், கலெக்டர் அலுவலகம் வந்திருந்த, சின்னாண்டிபாளையம் பொதுமக்கள். மதுக்கடை அமைக்கும் முயற்சியை தடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், 'மதுக்கடை திறக்கக்கூடாதென, ஊர் கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். மாணவ, மாணவியர் சென்று வரும் வழியில், மதுக்கடை அமைத்தால், பாதிப்பு ஏற்படும்; சட்டம் ஒழுங்கும் சீர்கெடும்.பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மதுக்கடை அமைப்பதை தடுக்க வேண்டும். இல்லாதபட்சத்தில், கிராம மக்கள் ஒன்றுபட்டு, தொடர் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் உருவாகும்,' என்றனர். பஸ் வசதி வேண்டும்
மங்கலம் ரோட்டில் இருந்து, சின்னாண்டிபாளையம் செல்ல, இரண்டு கி.மீ., துாரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது.டவுன் பஸ்கள் சின்னாண்டிபாளையம் வரை வந்து செல்லும் வகையில், பயன்பாட்டில் இருந்த டவுன் பஸ் மற்றும் மினி பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் எனவும், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
26-May-2025