உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூரில் ஓரா ஜூவல்லரி நகை கண்காட்சி துவக்கம்

திருப்பூரில் ஓரா ஜூவல்லரி நகை கண்காட்சி துவக்கம்

திருப்பூர் : நவீன ரக நகை விற்பனையில் பிரசித்தி பெற்ற ஓரா ஜூவல்லரியின் நகை கண்காட்சி மற்றும் விற்பனை திருப்பூர் அவிநாசி ரோடு, ஆர்.கே., ெரசிடென்சியில் நேற்று துவங்கியது. குத்துவிளக்கேற்றி கண்காட்சி துவக்கிவைக்கப்பட்டது. ஞானவேல், பூங்கொடி, செல்வராஜ், சுமதி மற்றும் குருநாதன், ஜெகதா ஆகியோர் கலந்து ெகாண்டனர். கண்காட்சி குறித்து விற்பனை மேலாளர் பிரபு ராமச்சந்திரன் கூறியதாவது; ஓரா ஜூவல்லரி, வைரம் செதுக்குதல், தயாரிப்பது என தங்க, வைர நகைகள் வடிவமைப்பது, சில்லறை விற்பனை என நீண்ட காலமாக ஈடுபட்டுள்ளது. இந்திய அளவில் மிகச்சிறந்த மணமகள் நகைகள் விற்பனை செய்கிறது.நாடு முழுவதும் 38 முக்கிய நகரங்களில், 93 கிளைகளுடன் செயல்படுகிறது. நுாற்றாண்டு பெருமை வாய்ந்த மரபு வழி, கை வினைஞர்கள் மூலம், பாரம்பரிய வடிவ நகைகள்; பெல்ஜிய வைரங்கள், வைர நகைகள், ஓரா கிரவுன் ஸ்டார் நகைகள்; ஆண்ட்வெயிட் ஹாங்காங், டோக்கியோ, மும்பை, நியூயார்க் உள்ளிட்ட உலகளாவிய நகை வடிவமைப்பு மையங்களுடன் வடிவமைப்பு, தலைமை, தயாரிப்பு, கண்டுபிடிப்புகள் ஓராவின் சிறப்புகள்.திருப்பூர் கண்காட்சி வரும் 6ம் தேதி (நாளை) வரை, தினமும் காலை 10:30 முதல் இரவு 8:00 மணி வரை நடைபெறும். இங்கு சிறப்பு சலுகையாக, ஒரு குறிப்பிட்ட மாடல் நெக்லஸ், 9999 ரூபாய் மட்டும் முன் பணம் செலுத்தி, மீதத்தை மாத தவணையாக செலுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி