உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பாலக்காடு ரயில் இயக்கம் மாற்றம்

 பாலக்காடு ரயில் இயக்கம் மாற்றம்

திருப்பூர்:கரூர் - திருச்சி ரயில் வழித்தடத்தில் தண்டவாளப் பராமரிப்பு, பொறியியல் பணி நடக்கிறது. இதனால், பாலக்காடு டவுன் - திருச்சி ரயில் (எண்:16844) வரும், 25, 29 மற்றும் 30ம் தேதி குளித்தலை ஸ்டேஷனில் நிறுத்தப்படும்; பணி முடிந்த பின், குளித்தலையில் இருந்து திருச்சிக்கு இந்த ரயில் தாமதமாக இயங்கும். திருச்சி - பாலக்காடு டவுன் ரயில் (எண்:16843) வரும், 25 மற்றும் 29ம் தேதி, பெருகாமணி ரயில்வே ஸ்டேஷனிலும், 30 ம் தேதி எலமனுார் ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தப்படும். பணி முடிந்த பின் பெருகமணியில் இருந்து வழக்கமாகன ஸ்டேஷன்களில் நின்று பாலக்காடு டவுன் செல்லும். பணியால் ரயில் தாமதமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ