உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெற்றோரே உஷார்!: கல்வி உதவித்தொகை வழங்குவதாக மோசடி

பெற்றோரே உஷார்!: கல்வி உதவித்தொகை வழங்குவதாக மோசடி

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மக்களை ஏமாற்றுவது திருப்பூரில் தொடர் கதையாகி வருகிறது. கல்லுாரி மாணவ, மாணவியரை அதிகளவு குறிவைக்கும் மோசடி கும்பல், அவர்களின் படிப்பு விவரங்களை சேகரித்து மாணவர்களின் பெற்றோரிடம், கல்வி அலுவலர் போல பேச்சு கொடுக்கின்றனர். அதனை பெற்றோரும் நம்பி விடுகின்றனர். அரசிடமிருந்து கல்வி உதவித்தொகை வந்திருக்கிறது என்றும், அதனை பெறுவதற்கு வீடியோ அழைப்பு செய்யுமாறு கூறுகின்றனர். அவ்வாறு செய்தால், 'க்யூஆர்' கோடு ஸ்கேன் செய்து, உதவித்தொகையை உள்ளிடவும் என்று கூறுகின்றனர். அதனை நம்பி, பணம் அனுப்பிய சில நொடிகளிலேயே வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை சுருட்டிவிட்டு ஏமாற்றிவிடுகின்றனர். இது முதல்முறை அல்ல. பல இடங்களில் இதுபோன்ற மோசடிகள் நடந்துகொண்டு இருக்கின்றன. மக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு இல்லை. தற்போது திருப்பூரிலும் இதுபோன்ற மோசடி அதிகரித்துள்ளது. தேவையில்லாத ஆன்லைன் வலைதளங்கள், சூப்பர் மார்க்கெட் போன்ற பொது இடத்தில் போன் நம்பர் மற்றும் பிற விவரங்கள் கொடுப்பதால், இவ்வாறான மோசடி அழைப்புகள் வருகின்றன. தேவையில்லாத இடத்தில் நமது விவரங்களை கொடுப்தை தவிர்க்க வேண்டும். தெரியாத நபர்களிடம் கவனமாக, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி