மேலும் செய்திகள்
நிழற்கூரை இல்லை; பயணியர் பாதிப்பு
15-Oct-2025
உடுமலை: உடுமலை பிரதான பஸ் நிறுத்தத்தில் நிழற்கூரை இல்லாததால், பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர். உடுமலை - தளி ரோடு வழியாக அமராவதி, திருமூர்த்தி, சின்னார், மூணாறு மற்றும் பல்வேறு கிராமங்களுக்கு டவுன்பஸ்கள் செல்கின்றன. இந்த ரோட்டில், யூனியன் ஆபீஸ் ஸ்டாப் பிரதான நிறுத்தமாக உள்ளது. ஆனால், இந்த ஸ்டாப்பில் நிழற்கூரை இல்லாததால், பயணியர் ரோட்டில் திறந்த வெளியில் நின்று பஸ் ஏற வேண்டியதுள்ளது. இதனால் அவர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, அங்கு நிழற்கூரை அமைக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
15-Oct-2025