சிகிச்சையில் இருந்தவர் பலி; கொலை வழக்காக மாற்றம்
தாராபுரம் : மனைவியை கிண்டல் செய்து தாக்கிய நபர்களை தட்டி கேட்ட கணவரை, இருவர் தாக்கினர். சிகிச்சையில் இருந்த கணவர் இறந்த நிலையில், கொலை வழக்காக போலீசார் மாற்றம் செய்தனர்.தாராபுரம், மூலனுார், பட்டத்திபாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல், 39. இவரது மனைவி உள்ளிட்ட சில பெண்களை அப்பகுதியை சேர்ந்த சிவக்குமார், 49, சேமலை, 39 என, இருவரும் கிண்டல் செய்தனர். தொடர்ந்து, சக்திவேலுவின் மனைவியை அவதுாறாக பேசியும், தாக்கினர். இதுகுறித்து அறிந்த சக்திவேலு தட்டி கேட்டார். இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தாக்கப்பட்டதில் படுகாயமடைந்து, சக்திவேல் சிகிச்சை பெற்று வந்தார். புகாரின் பேரில், சிவக்குமார், சேமலை ஆகியோரை மூலனுார் போலீசார் கைது செய்தனர்.இச்சூழலில், கடந்த, மூன்று நாட்களாக சிகிச்சையில் இருந்த அவர் நேற்று காலை இறந்தார்.இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்துள்ளனர்.