உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நோயாளிகள் காத்திருப்பு கூடம்; ரோட்டரி சங்கம் அர்ப்பணிப்பு

நோயாளிகள் காத்திருப்பு கூடம்; ரோட்டரி சங்கம் அர்ப்பணிப்பு

பல்லடம்; பல்லடம் ரோட்டரி சங்கம், நகர தொழில் துறையினர் சார்பில், மேற்கு பல்லடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, 3 லட்சம் ரூபாய் மதிப்பில், நோயாளிகள் காத்திருப்புக்கூடம் கட்டப்பட்டது. இதன் அர்ப்பணிப்பு விழாவில், வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி வரவேற்றார். மருத்துவர் அபுதாகிர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் கந்தசாமி, முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்லடம் வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் கண்ணையன், ரோட்டரி சங்க பொருளாளர் பாபு, வியாபாரிகள் சங்க செயல் தலைவர் பானு பழனிசாமி ஆகியோர் காத்திருப்பு கூடத்தை பொது மக்களுக்காக அர்ப்பணித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை