உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விதையில் கவனம்; அறுவடை மகிழ்ச்சி

விதையில் கவனம்; அறுவடை மகிழ்ச்சி

பல்லடம்,; ''விதையில் மிகுந்த கவனம் செலுத்தினால், அறுவடையின் போது மகிழ்ச்சி அடையலாம்'' என, விவசாயிகளுக்கு, பல்லடம் வேளாண் துறை அறிவுரை வழங்கியுள்ளது.வேளாண் அலுவலர் வளர்மதி கூறியதாவது:விதைகளின் தரம் அறிந்து சாகுபடி பணி மேற்கொள்வது சாலச்சிறந்தது. பெரும்பாலான விவசாயிகள், முந்தைய விளைச்சலில் இருந்து கிடைக்கும் விதை களையே அடுத்த சாகுபடிக்கு பயன்படுத்துகின்றனர்.அத்தகைய விதைகளில் வீரியம் குறைந்த, நோய் தாக்குதலுக்கு உண்டான, உடைந்த விதைகள் இருக்கக்கூடும். வீரியம் குறைந்த விதைகளும் முளைக்கும். ஆனால், தரமான நாற்றுகளை கொடுக்காது.இதேபோல், நோய் தாக்குதலுக்கு உண்டான விதைகளும் முளைத்த சில நாட்களிலேயே கருகிவிடும். விதை பரிசோதனை மூலம் மட்டுமே இதை கண்டறிய முடியும். இயல்பானது, இயல்பற்றது, கடின விதைகள், பூச்சி நோய் தாக்குதலுக்கு உண்டானது என்பவற்றை கண்டறிந்து வகைப்படுத்தி, தர நிர்ணயம் செய்யப்படுகிறது.தரமான விதைகளை பயன்படுத்தினால் மட்டுமே எதிர்பார்க்கும் மகசூலை பெற முடியும். குறைந்தபட்சம்,3 ஆண்டுக்கு ஒரு முறை இருப்பில் உள்ள விதைகளை மாற்றி சான்று விதைகளை பெற்று விதைப்பு செய்ய வேண்டும்.ஒவ்வொரு ஆண்டும் சான்று பெற்ற விதிகளை வாங்கி விதைப்புக்கு பயன்படுத்த வேண்டும். சொந்தமாக வைத்துள்ள விதைகளை விதைப்பதாக இருந்தால், முன்கூட்டியே விதை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ