உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வலிமையுடன் அமைதி நம் ஒப்பற்ற குறிக்கோள்

வலிமையுடன் அமைதி நம் ஒப்பற்ற குறிக்கோள்

வி வேகானந்தர் நமக்கு விடுத்த ஓர் அறைகூவல் என் நினைவிற்கு வருகிறது. ஒவ்வொருவருக்கும் அவர்களின் உண்மை இயல்பைப் போதியுங்கள், உறங்கும் ஆன்மாவை எழுப்புங்கள், அது எவ்வாறு விழித்தெழுகிறது என்பதைப் பாருங்கள். உறங்குகின்ற ஆன்மா மட்டும் விழித்தெழுந்து தன்னுணர்வுடன் செயலில் ஈடுபடுமானால் சக்தி வரும். பெருமை வரும், நன்மை வரும், துாய்மை வரும், எவையெல்லாம் மேலானதோ, அவை அத்தனையும் வரும். கல்வியறிவு பெற்ற, அறிவு சார்ந்த குடிமகன்களாக வாழ முயல்வோம். அதுவே சுவாமிஜி நமக்களித்துள்ள பாரம்பரியம். அத்தகைய குடிமகன் அவரது எழுந்திருங்கள்; விழித்துக் கொள்ளுங்கள்; லட்சியத்தை அடையும்வரை ஓயாது உழையுங்கள் என்ற அறைகூவலுக்குச் செவிசாய்ப்பான்; தனது உடல்நலனையும் சேர்வுறாத மனதையும் சுவாமிஜி கூறியபடி உறுதியுடன் பாதுகாப்பான். நம் குறிக்கோள் -வலிமையான அமைதியான இந்தியாவை உருவாக்குவது மட்டுமல்ல. அந்த அமைதியை மற்ற உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதும் ஆகும். - 1.10.2004 அன்று கொல்கத்தாவில் சுவாமி விவேகானந்தர் வாழ்ந்த இல்லத்தை ராமகிருஷ்ண மிஷனின் கலாச்சாரச் சின்ன நினைவகமாகத் திறந்து வைத்து அப்துல் கலாம் ஆற்றிய உரையின் ஒரு சிறிய பகுதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !