உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பாலம் கட்டாமல் ரோடு போட்டதால் மக்கள் அவதி

 பாலம் கட்டாமல் ரோடு போட்டதால் மக்கள் அவதி

பொங்கலுார்: கொடுவாய் நாச்சிபாளையம் ரோடு கவுண்டன்புதுார் அம்பேத்கர் நகரில் இருந்து செம்மாண்ட கவுண்டம்பாளையம் வரை செல்லும் ரோட்டில், பி.ஏ.பி., வாய்க்கால் கடந்து செல்கிறது. இதில் பாலம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் பாலம் சேதமடைந்தது. மேலும் அந்த ரோடும் சிதிலமடைந்து கிடந்தது. சமீபத்தில் தான் தார் ரோடு போடப்பட்டது. பி.ஏ.பி., பாலத்தை கட்டி விட்டு தார் ரோடு போடுவார்கள் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ரோடு போட்டு விட்டு பாலத்தை சீரமைக்கவில்லை. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே பயணிக்கும் நிலை உள்ளது. பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித் துறை ஒன்றிணைந்து சேதமடைந்த பி.ஏ.பி., பாலத்தை உடனடியாக சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை