உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிராம ஏ.டி.எம்.,க்கு பூட்டு பாதிப்பை சந்திக்கும் மக்கள்

கிராம ஏ.டி.எம்.,க்கு பூட்டு பாதிப்பை சந்திக்கும் மக்கள்

உடுமலை : குடிமங்கலம் ஒன்றியம், அனிக்கடவில், கனரா வங்கி கிளை உள்ளது. அனிக்கடவு, ராமச்சந்திராபுரம், விருகல்பட்டி, புதுார், பழையூர், சிந்திலுப்பு, வல்லக்குண்டாபுரம் மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள், தங்கள் பல்வேறு பரிவர்த்தனைக்காக இந்த வங்கியை மட்டுமே நம்பியுள்ளனர்.இந்நிலையில், வங்கி முன் செயல்பட்டு வந்த ஏ.டி.எம்., பழுதடைந்து பல மாதங்களாகியும் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், அவசர தேவைக்கு கூட பணம் எடுக்க முடியாமல் மக்கள் பாதிக்கின்றனர்.குறிப்பாக, விவசாய தொழிலாளர்கள் நிறைந்த இப்பகுதியில், பணம் எடுக்க நெகமம், பெதப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.பெதப்பம்பட்டியிலுள்ள கனரா வங்கி ஏ.டி.எம்.,மும் செயல்படாமல் இருப்பதால், மக்கள் உடுமலைக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது.ஏ.டி.எம்.,மை பயன்பாட்டுக்கு கொண்டு வர பல முறை கோரிக்கை விடுத்தும், வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், திருப்பூர் கலெக்டர் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி பொறுப்பாளர்களுக்கு அப்பகுதி மக்கள் மனு அனுப்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை