மேலும் செய்திகள்
பலகார சீட்டு பணம் 'அம்போ'
28-Oct-2025
பல்லடம்: பல்லடத்தில், நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பல்லடம் கால்நடை உதவி இயக்குனர் அன்பரசு கூறியதாவது: பல்லடம் நகரில் மட்டும், 2,500க்கும் அதிகமான வளர்ப்பு நாய்கள் உள்ளன. வளர்ப்பு நாயாக இருந்தாலும், தெரு நாயாக இருந்தாலும், அவற்றுக்கு ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டியது கட்டாயம். ரேபிஸ் என்பது, உமிழ்நீர் மூலம் பரவும் வைரஸ் தொற்று. நாய்களால் மற்ற விலங்குகளுக்கு மட்டுமன்றி, மனிதர்களுக்கும் ஆபத்து உள்ளது. செல்லமாக வளர்க்கப்படும் வளர்ப்பு நாய்களை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொஞ்சி மகிழ்கின்றனர். இவ்வாறான சூழலில், நாய்களுக்கு ஏற்படும் ரேபிஸ் தொற்றால், ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்கப்படும். அனைவரும் தங்கள் நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசியை போட்டுக் கொள்ள அறிவுறுத்துகிறோம். இந்த தடுப்பூசி, தமிழக அரசு மூலம், 17 ரூபாய்க்கு போடப்படுகிறது. பல்லடம் கால்நடை மருத்துவமனைக்கு 1,300 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், 650க்கும் மேற்பட்டவர்கள் வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போட்டு பயனடைந்துள்ளனர். விடுபட்டவர்களும், நாய்களுக்கு தடுப்பூசி போட்டு பயனடைய வேண்டும்.
28-Oct-2025