மேலும் செய்திகள்
குடிநீர் கோரி போலீஸ் குடும்பத்தினர் மறியல்
27-Jun-2025
திருப்பூர்; குடியிருப்பு பகுதியில் குடிநீர் சப்ளை செய்யாததால் அவதியடைந்த பொதுமக்கள் மங்கலம் ரோட்டில், சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாநகராட்சி, 43வது வார்டு, மங்கலம் ரோடு, முத்துசாமி கவுண்டர் வீதியில், பல நுாற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்து 15 நாட்களுக்கு மேலானதால், அவதிப்பட்ட பொதுமக்கள் நேற்று மங்கலம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சென்ற கே.வி.ஆர்., நகர் போலீசார் மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனர். அப்பகுதியில் பணியாற்றும் குடிநீர் குழாய் ஆபரேட்டர் வரவழைக்கப்பட்டார். கடந்த 15 நாட்களாக குடிநீர் சப்ளை செய்யாதது குறித்து பொதுமக்கள் கேட்ட போது, அவர் பொறுப்பற்ற முறையில் பதில் அளித்தார். இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் ஊழியரை கண்டித்து, பொதுமக்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
27-Jun-2025