மேலும் செய்திகள்
பணி நிரந்தரம் வலியுறுத்திமின்வாரிய ஊழியர் மறியல்
24-Sep-2025
பல்லடம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை தொடர்ந்து நான்கு நாள் பள்ளி, கல்லு ா ரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பெரும்பாலான அரசு தனியார் ஊழியர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர், பண்டிகையை கொண்டாட குடும்பத்துடன் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். சொந்த ஊருக்கு சென்ற தொழிலாளர்கள், அரசு தனியார் ஊழியர்கள் உள்ளிட்டோர், பண்டிகை முடிந்து, மீண்டும் ஊருக்கு திரும்பி வருகின்றனர். கோவையிலிருந்து, மதுரை, திருச்சி, தேனி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்துக்கும் பல்லடம் தேசிய நெடுஞ்சாலை பிரதான வழித்தடமாக உள்ளது. தீபாவளி முடிந்து ஊருக்கு திரும்பும் பொதுமக்களால், பல்லடம் தேசிய நெடுஞ்சாலை வழியே, வாகனங்கள் படையெடுத்து சென்றவண்ணம் உள்ளது. கடந்த 2 நாளாகவே, பனப்பாளையம் முதல் அண்ணா நகர் வரை, நான்கு வழிச்சாலையின் இருபுறமும், வாகனங்கள் நிரம்பி வழிகின்றன. தொடர்ந்து பெய்து வரும் பருவமழைக்கு இடையிலும், பல்லடம் போலீசார், அயராமல் களப்பணி ஆற்றி போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
24-Sep-2025