உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திறந்த நிலையில் கிணறு பள்ளி முன் பேராபத்து

திறந்த நிலையில் கிணறு பள்ளி முன் பேராபத்து

பல்லடம்: பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சியில் உள்ள அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படிக்கின்றனர். இந்த நடுநிலைப்பள்ளி நுழைவு வாயில் அருகே, பொது கிணறு ஒன்று உள்ளது. கிணற்றின் மேல் பகுதியில் பாதுகாப்பு கருவி போடப்பட்டுள்ள இரும்பு கிரில் உடைந்துள்ளது. இதன் காரணமாக, அதன் ஒரு பகுதி திறந்த நிலையில் உள்ளது.பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர், இப்பகுதியில், பஸ் ஏறுவதற்கு காத்திருப்பதுடன், விளையாடுவதும், நடந்து செல்வதுமாக உள்ளனர். கிணறும் தாழ்வாக இருப்பதால், பள்ளி மாணவ மாணவியருக்கு ஆபத்து காத்திருக்கிறது. கிணற்றின் மேல் பகுதியில் உள்ள கிரில் உடைந்து நீண்ட நாட்கள் ஆகியும், மாற்றப்படாமலேயே உள்ளது. பள்ளி நிர்வாகமும், ஊராட்சியும் இது குறித்து கண்டு கொள்ளாமலேயே உள்ளனர். எனவே, பள்ளி குழந்தைகளின் நலன் கருதி, கிணற்றின் மேல் பகுதியில் உள்ள இரும்பு கிரில்லை புதுப்பித்து மாற்றி அமைக்க வேண்டும். ---கரைப்புதுார் அரசு பள்ளி முன் பாதுகாப்பற்ற முறையில் உள்ள கிணறு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை