கலெக்டரிடம் மனு
திருப்பூர் : சமூக ஆர்வலர் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:பல்லடம் நகராட்சி தலைவராக கவிதாமணி உள்ளார். இவரது கணவரான தி.மு.க., நகர செயலாளர் ராஜேந்திரகுமார், அறிவிக்கப்படாத தலைவராக செயல்பட்டு வருகிறார். கட்டண கழிப்பிடம், டூவீலர் பார்க்கிங், ரோடு போடுவது, குப்பை தரம்பிரிப்பது என அனைத்திலும் முறைகேடு நடக்கிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.