உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அடிப்படை வசதி கோரி பேரூராட்சியில் மனு

அடிப்படை வசதி கோரி பேரூராட்சியில் மனு

உடுமலை ; மடத்துக்குளம் பேரூராட்சி, கணேசபுரம் பகுதியில், 300க்கும் மேற்பட்ட வீடுகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில், பொதுமக்களுக்கு தேவையான, குடிநீர், சாக்கடை, ரோடு என அடிப்படை வசதிகள் இல்லாமல், 15 ஆண்டுகளாக பாதித்து வருகின்றனர்.கனமழை பெய்தால், வெள்ள நீர் வடிய வழியின்றி, பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், மழை காலங்களில், மழை நீருடன், கழிவு நீர் கலந்து, குடியிருப்பு பகுதியில் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது.எனவே, கணேசபுரம் பகுதியில், சாக்கடை கால்வாய் மற்றும் ரோடு அமைக்கவும், வீடுகளுக்கு மத்தியில் தேங்கியுள்ள குப்பை, கழிவுகளை அகற்ற வேண்டும், என கணேசபுரம் பகுதி மக்கள் பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலரிடம் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ