உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அனுமதியின்றி வழிபாட்டு தலம் : முற்றுகை அறிவிப்பால் பதற்றம்

அனுமதியின்றி வழிபாட்டு தலம் : முற்றுகை அறிவிப்பால் பதற்றம்

பல்லடம்: பல்லடம் அருகே, அனுமதியின்றி வழிபாட்டுத் தலம் திறக்கப்படுவதை எதிர்த்து பொதுமக்கள் முற்றுகைப்போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த, அறிவொளி நகர், குருவாயூரப்பன் நகர் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட வழிபாட்டு தலம் அனுமதியின்றி கட்டப்பட்டதாக கூறி, இப்பகுதி பொதுமக்கள், நேற்று முன்தினம், பல்லடம் தாசில்தார் சபரியை சந்தித்து மனு அளித்தனர். இன்று வழிபாட்டுத்தலம் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இதற்கு அனுமதி அளித்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மக்கள் எச்சரித்தனர். நேற்று, இப்பகுதி பொதுமக்கள் பல்லடம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, அங்கு அதிவிரைவு படை போலீசார் குவிக்கப்பட்டனர். ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று காலை வருகை தர உள்ளதாகவும், அவரது தலைமையில் அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள வழிபாட்டுத்தலத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு பதற்றம் நிலவி வருகிறது. அமைதிப்பேச்சுவார்த்தை இதற்கிடையே இருதரப்பினரிடையே அமைதிப்பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. ''வழிபாட்டு தலம் என்றால், கலெக்டர் ஒப்புதல், டி.டி.சி.பி., அனுமதி வேண்டும். இன்று அறக்கட்டளை துவக்க விழாவை தவிர வழிபாட்டு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ள கூடாது. மீறினால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்'' என, தாசில்தார் சபரி கூறினார். இதையடுத்து, அமைதி பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை