உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வள்ளிபுரம் ஊராட்சியில் 10 ஆயிரம் மரக்கன்று நடவு

வள்ளிபுரம் ஊராட்சியில் 10 ஆயிரம் மரக்கன்று நடவு

திருப்பூர்; தமிழக அரசின் மரம் வளர்ப்பு திட்டம் மற்றும் ஜெ.எஸ்.டபிள்யூ., அறக்கட்டளை சார்பில், வள்ளிபுரத்தில் மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியுள்ளது. திருப்பூர் ஒன்றியம், வள்ளிபுரம் ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சியில், அறக்கட்டளை நிர்வாகி பாரதி வரவேற்றார். பி.டி.ஓ., (கிராம ஊராட்சி) விஜய குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பனை மரக்கன்றுகள் உட்பட, 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார். வள்ளிபுரம் பகுதியில் உள்ள, குளம், குட்டைகள், பொது இடங்களில், மரக்கன்றுகள் நட்டு, தொடர்ந்து தண்ணீர்விட்டு பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், ஒன்றிய உதவி பொறியாளர் மனோஜ்குமார், ஊராட்சி செயலாளர் மூர்த்தி, 'சீடு' நிறுவன பிரதிநிதி ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !