மேலும் செய்திகள்
ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு மரக்கன்று வினியோகம்
27-Nov-2024
உடுமலை; தற்போதைய சீசனில், கிராமந்தோறும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தீவிரப்படுத்தினால், பயனுள்ளதாக இருக்கும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை, குடிமங்கலம் ஒன்றியங்களில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படுகின்றன.இதற்கென திட்டத்தின் கீழ் பணியாளர்களும், பராமரிப்புக்கு நிதியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.ஆனால், தொடர் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு இல்லாததால், கிராமங்களில், நடப்பட்ட மரக்கன்றுகள் பெரும்பாலும் கருகியுள்ளன; பல ஊராட்சிகளில், மரக்கன்றுகள் நடவு செய்ததற்கான சுவடே இல்லாமல், உள்ளது.இதே போல், பல்வேறு திட்டங்களில் கட்டப்பட்ட தடுப்பணைகளும் பரிதாப நிலையில் உள்ளன. பருவமழை துவங்கி தீவிரமாக பெய்து வரும் நிலையில், குடிமங்கலம் ஒன்றியத்தில், மழை நீரை சேகரிப்பதற்கான எவ்வித முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.தற்போதைய சீசனில், கிராமந்தோறும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தீவிரப்படுத்தினால், பயனுள்ளதாக இருக்கும்.இதே போல், மழை நீர் ஓடைகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறிய தடுப்பணைகளின் நீர் வரத்து பகுதிகளை துார்வாரி, புதர்களை அகற்றினால், மழை நீரை சேகரிக்க முடியும்.எனவே, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், உடனடியாக இப்பணிகளை துவக்க, ஊரக வளர்ச்சித்துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
27-Nov-2024