உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிளாஸ்டிக் கழிவுகள் சாலையோரம் குவிப்பு

பிளாஸ்டிக் கழிவுகள் சாலையோரம் குவிப்பு

பொங்கலுார்: திருப்பூர் - ஒட்டன்சத்திரம் ரோடு, பொங்கலுார் ஒன்றியம், அவிநாசி பாளையம் சுங்கம் அருகே, ரோட்டோரத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிக்கப்பட்டுள்ளது. அருகிலேயே தனியார் கல்லுாரி உள்ளது. தற்போது வடகிழக்கு பருவ மழைக்காலம் துவங்கி உள்ளதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. கழிவிலிருந்து வரும் துர்நாற்றம் மாணவர்கள், பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. எனவே, பிளாஸ்டிக் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் புதிதாக கழிவுகள் கொட்டுவது அனுமதிக்க கூடாது என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை