உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முதல்வருக்கு கருப்பு கொடி; பா.ம.க., அறிவிப்பு

முதல்வருக்கு கருப்பு கொடி; பா.ம.க., அறிவிப்பு

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி பிரச்னையில் முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில், அவர் வருகையின் போது கருப்பு கொடி காட்டப்படும் என, பா.ம.க., அறிவித்துள்ளது.இது குறித்து, திருப்பூரில் பா.ம.க., மாநில பொருளாளர் சையது மன்சூர் உசேன் நிருபர்களிடம் கூறியதாவது:திருப்பூர் மாநகராட்சியில் சொத்துவரி உயர்வு செய்யப்பட்டது. இதற்கு ஆளும் கட்சி கூட்டணி உள்ளிட்ட கட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பின், கடுமையான எதிர்ப்பை அடுத்து, அரசுக்கு தீர்மானம் அனுப்புவதாக ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டது. இந்த அரசின் பதவிக்காலமே இன்னும் சில மாதம் தான் உள்ளது. ஆனால், தீர்மானத்தின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, மக்கள் நலனுக்கு தீர்மானம் கொண்டுவர முடியாத கவுன்சிலர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி வரும், 22ம் தேதி திருப்பூருக்கு வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு கருப்பு கொடி காட்டப்படும். பா.ம.க., வில் தற்போது சிறு பிரச்னை நிலவுகிறது. இது விரைவில் சரியாகி விடும். பா.ம.க., இடம் பெறும் கூட்டணி தான் வெற்றி பெறும். எங்கள் கட்சி எந்த கூட்டணி என்பது குறித்து முடிவு செய்ய இன்னும் கால அவகாசம் உள்ளது. தேர்தலின் போது முடிவு செய்தால் போதும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை