உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பி.எம்.எஸ்., ஆர்ப்பாட்டம்

பி.எம்.எஸ்., ஆர்ப்பாட்டம்

திருப்பூர்: இ.பி.எஸ்., திட்டத்தில் ஓய்வூதியம் பெறும் பென்சன்தாரர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் பென்சனாக வழங்கப்படுகிறது. இதை குறைந்த பட்சம் 5 ஆயிரம் ரூபாய் என உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கையை வலியுறுத்தி, திருப்பூரில், பி.எப்., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநில துணை தலைவர் பிரபு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மாதவன், செயல் தலைவர் செந்தில், மாவட்ட தலைவர் லட்சுமி நாராயணன் முன்னிலை வகித்தனர். பொருளாளர் சீனிவாசன் வரவேற்றார். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். போக்குவரத்து சங்க செயலாளர் சிவகுமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை