பி.எம்.எஸ்., ஆர்ப்பாட்டம்
திருப்பூர்; தொழிலாளர் நலன் சார்ந்த அம்சங்களை இணைத்து, மத்திய பட்ஜெட்டில் திருத்தம் செய்ய கேட்டு, பி.எம்.எஸ்., சார்பில் நேற்று, அனைத்து மாவட்ட தலைநகரிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திருப்பூரில், கலெக்டர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். செயலாளர் மாதவன், பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில பாரத செயற்குழு உறுப்பினர் ஜெயப்பிரகாஷ், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.அங்கன்வாடி, ஆஷா, மதிய உணவு தொழிலாளர் போன்ற திட்ட தொழிலாளர்கள், பீடி, தோட்டக்கலை, தேயிலை தோட்டம், விவசாயம், சுரங்க தொழிலாளர் உள்பட அமைப்புசாரா தொழிலாளர்களின் தேவைகளை பட்ஜெட் பூர்த்தி செய்ய தவறிவிட்டது.இ.பி.எஸ்., - 95 திட்டத்தில், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும். கடைசி மாத சம்பளத்தில், 50 சதவீதம் ஓய்வூதியமாக கிடைப்பதை உறுதி செய்து, அந்த தொகையை விலைவாசி புள்ளியுடன் இணைக்க வேண்டும் உட்பட பல கோரிக்கைளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.