உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விபத்தில்லா பயணம் போலீசார் விழிப்புணர்வு

விபத்தில்லா பயணம் போலீசார் விழிப்புணர்வு

திருப்பூர்: விபத்தில்லா பயணத்தை மேற்கொள்ளும் வகையில், திருப்பூர் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.விபத்தில்லா பயணத்தை உறுதிபடுத்தும் வகையில், திருப்பூர் மாநகர போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாநகர போக்குவரத்து போலீஸ் மற்றும் நவீன தெருக்கூத்து கலைக்குழு சார்பில், விழிப்புணர்வு நாடகம் புஷ்பா சந்திப்பில் நேற்று நடந்தது.இதனை, துணை கமிஷனர் ராஜராஜன் துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்த விழிப்புணர்வு நாடகத்தில் டூவீலர் செல்வோர், மொபைல் போன் பயன்படுத்த கூடாது, ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என விழிப்புணர்வு செய்தனர். தொடர்ந்து, சாலை விதிகளை கடைபிடிக்காமல் சென்றதால் ஏற்பட்ட விபத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் வேடமணிந்து நடித்து காட்டி விழிப்புணர்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை