உள்ளூர் செய்திகள்

போலீஸ் டைரி

சிறுமி பலாத்காரம்: 4 பேர் கைது

பொங்கலுார் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்ததாக, டீ மாஸ்டர் குமார், 34 என்பவர் ைகது செய்யப்பட்டார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியிடம் அவிநாசிபாளையம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது மேலும் சிலர் சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்தது தெரிந்தது. இதையடுத்து மகேஷ்குமார், 28; சிரஞ்சீவி, 19 மற்றும் கார்த்திக், 25 ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நான்கு பேர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின், நான்கு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஏலச்சீட்டு மோசடி: பெண் கைது

திருப்பூர், திருமலை நகரை சேர்ந்தவர் சரளா, 40. அப்பகுதி ரேஷன் கடையில் தற்காலிக பணியாளராக உள்ளார். இவர் நடத்தி வந்த ஏலச்சீட்டு, பண்டு சீட்டில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வாரம், மாதம் என பல வகையில் செலுத்தி வந்தனர். சீட்டு முதிர்வடைந்தும், பணத்தை திருப்பி கொடுக்காமல், 30 லட்சம் ரூபாயை ஏமாற்றினார். இதுகுறித்த புகாரின் பேரில், திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சரளாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ